கூகுள் + ஐ மொபைலில் பயன்படுத்துவது எப்படி?

0
மீபகாலமாக ஃபேஸ்புக்,டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இணைய தள ரசிகர்களிடையே தவிர்க்க முடியாத,பெரும் வரவேற்பை பெற்று வருது. எகிப்துல மக்கள் புரட்சி நடக்க மிக முக்கிய பங்காளனா இருந்தது இந்த ரெண்டு சமூக வலைத் தளங்களும் தான். இந்த வரவேற்பை ரொம்பவே கூர்ந்து கவனிச்சு கூகுள் நிறுவனம் அறிமுகப்
படுத்தியிருக்கும் ஒரு புதிய சோஷியல் நெட்வொர்க் தளம் தான் ‘கூகுள் பிளஸ்'.

இப்போ சோதனை ஓட்டமா இதை அறிமுகப்படுத்தியிருக்குது கூகுள்.காரணம் கூகுளோட ரசிகர்கள் இதுல ஏதேனும் குறைகளை சொன்னா அதை நிவர்த்தி பண்ணி அப்புறமா ஒரு முழுமையான தளமா குடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கு. கூடிய சீக்கிரம் இதுல இருக்குற சின்ன சின்ன குறைகளை எல்லாம் நிவர்த்தி பண்ணி ஃபேஸ்புக் ,டிவிட்டருக்கு நிகரா ‘கூகுள் பிளஸ்’ வரும்னு நாம நம்பலாம்.

ஜிமெயிலை அறிமுகப்படுத்தின புதுசுல எப்படி அதை ஏற்கனவே யூஸ் பண்ணுற ஒருத்தர் நம்மளை இன்வைட் பண்ணினா அதை பயன்படுத்த முடியும்கிற மாதிரி கூகுள் பண்ணிச்சோ அதே நிலமை தான் கூகுள் பிளஸ்க்கும்.ஆமாம்,நாம கூகுள் பிளஸ் தளத்தை முழுமையா பயன் படுத்தனும்னா அதை ஏற்கவே யூஸ் பண்ணுற நண்பர் யாராவது ஒருத்தர் நமக்கு இமெயில்ல இன்வைட் அனுப்பனும். அப்போதாம் நாம யூஸ் பண்ண முடியும்.

சரி டெஸ்க்டாப்,லேப்டாப்ல கூகுள் பிளஸ் ஈஸியா பயன்படுத்தலாம். மொபைல்ல அது சாத்தியமா?

கண்டிப்பா சாத்தியம் தான். ஆனா அதிலேயும் இன்னும் முழுமை இல்லை. இருந்தாலும் முடிஞ்சவரைக்கும் மொபைல்ல ‘கூகுள்பிளஸ்’ ஐ எப்படி பயன்படுத்தலாம்னு இங்க பாக்கலாம்.நீங்க ஆன்ட்ராய்டு ஓ.எஸ் உள்ள மொபைல்ல 2.1 இல்லேன்னா அதுக்கும் மேல உள்ள வெர்ஷன் வெச்சிருந்தீங்கன்னா முதல்ல உங்களோட ஆன்ட்ராய்டு மார்க்கெட்டை அப்டேட் பண்ணிட்டு அப்புறம் அங்க இருக்குற சர்ச் பாக்ஸ்ல google+ ன்னு டைப் பண்ணி தேடுனீங்கன்னா வர்ற அப்ளிகேஷன்கள்ல முதல் அப்ளிகேஷன் அதுவாத்தான் இருக்கும். அதை கிளிக் பண்ணி இன்ஸ்டால் பண்ணி நீங்க யூஸ் பண்ண ஆரம்பிக்கலாம்.

google + barcode
இல்லேன்னா உங்க மொபைல்ல இங்க இருக்குற பார்கோடை(மேலே உள்ள படத்தை பார்க்கவும்!) capture பண்ணுனீங்கன்னா வர்ற லிங்ல போயி அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்யலாம். பார்கோடை capture பண்ண உங்க மொபைல்ல barcode reader அல்லது barcode scanner அப்ளிகேஷன் கண்டிப்பா இருக்கணும். இல்லேன்னா மார்க்கெட்டுல போயி இலவசமா தரவிறக்கம் செஞ்சிக்கங்க.

ஆனா இப்போதைக்கு அமெரிக்காவுல இருக்குற ஆன்ட்ராய்டு மொபைல் களுக்கு மட்டும் தான் இந்த தனிப்பட்ட அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்யக்கூடிய வசதி இருக்குன்னு கூகுள் சொல்லியிருக்கு. மத்த நாட்டுல உள்ளவங்க அவங்க மொபைலோட ப்ரௌசர்ல m.google.com/plus ன்னு அட்ரஸ் டைப் பண்ணி கூகுள் பிளஸ் ஐ யூஸ் பண்ண முடியுமாம். அதெப்படி அவிங்க மட்டும் தனி அப்ளிகேஷனா பயன்படுத்தலாம். நம்மளால முடியாதான்னு நீங்க கேக்கலாம்.கண்டிப்பா முடியும்

எப்படி ? ரொம்ப சிம்பிள், உங்க கணிணியில ஆன்லைன்ல போயிட்டு இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க, அப்புறமா ஓபன் ஆகுற பக்கத்துல நடுவுல view ன்னு இருக்குறதை கிளிக் பண்ணுனா உங்க ஆன்ட்ராய்டு போனுக்கான ‘கூகுள் பிளஸ்’ அப்ளிகேஷன் டவுன்லோடு ஆகும்.அதை அப்படியே உங்க மொபைல இன்ஸ்டால் பண்ணி நீங்க பயன்படுத்தலாம்.

இப்போதைக்கு ஆன்ட்ராய்டு ஒ.எஸ் மொபைல்களுக்கும் ஆப்பிள் ஐ-போனுக்கு மட்டும் தான் இந்த தனி அப்ளிகேஷன் வந்திருக்கு. அடுத்ததா சிம்பியன் ஓ.எஸ்,பிளக்பெர்ரி ஓ.எஸ், விண்டோஸ் மொபைல் ஓ.எஸ் ல சீக்கிரம் வரப்போவுது. இந்த ஓ.எஸ் களுக்கான ‘கூகுள் பிளஸ்’ தனி அப்ளிகேஷனும், எஸ்.எம்.எஸ் மூலமா ‘கூகுள் பிளஸ்’ ஐ பயன்படுத்துற வசதியும் கொஞ்சம் லேட்டா வரும்.

ஆப்பிள் ஐ- போனுக்கு கூகுள் பிளஸ் அப்ளிகேஷன் இப்போது அதன் மார்க்கெட்டில் கிடைக்கிறது, தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்.

மொபைலுக்கான இணைய வானொலிகள்!

1

மொபைல் போன் வழியாக இணையதளங்களை பயன்படுத்தும் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.ஒரு வழியாக இந்தியாவிலும் 3ஜி எனப்படுகிற மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தை சென்னை உட்பட இந்தியாவின் பெருநகரங்களில் பி.எஸ்.என்.எல், ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ரிலையன்ஸ்,டோகோமோ என அனைத்து மொபைல் ஆப்பரேட்டர் நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி யிருப்பதால் மொபைல் பாவனையாளர்கள் மிக அதிக அளவில் அந்த 3ஜி சேவையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

அதேபோல் மொபைல் மூலமாக இணைய வானொலிகளையும் நாம் பயன்படுத்தி அதன்மூலம் உலகம் முழுக்க இருக்கின்ற தமிழ் உட்பட பல மொழிகளில் உள்ள வானொலிகளை 24மணி நேரமும் நாம் நமது மொபைலில் டிஜிட்டல் ஒலிதரத்தில் கேட்க முடியும்.

இதற்கு GPRS மற்றும் EDGE தொழில்நுட்ப வேகம் இருந்தால் போதும், நாம் இணையதள வானொலி சேவைகளை கேட்க முடியும்.என்றாலும் 3ஜி தொழில்நுட்பம் இருந்தால் தடையில்லா (buffering problem) வானொலி சேவைகளை கேட்க முடியும். அது இன்னும் சிறப்பாக இருக்கும்.

இந்த இணையதள வானொலி சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவே நமக்கு பல்வேறு நிறுவனங்கள் இலவச மொபைல் அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. அவற்றை நாம் நமது மொபைல் போன்களில் பதிந்து கொண்டால் ஒரு புதிய இசை உலகை நீங்கள் காணலாம்.

பின்குறிப்பு : பின்வரும் வானொலிகளின் பெயர்களின் மேலே "கிளிக்" செய்து அந்தந்த வானொலிகளின் இணையதளங்களில் சென்று சொல்லப்படும் வழிமுறைகளை பின்பற்றி அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

virtual radio  இந்த மென்பொருளில் 300 க்கும் மேற்பட்ட மொழி வாரியான வானொலிகளை கேட்கலாம்.குறிப்பாக தமிழ் வானொலிகள் அதிகம் இதில் இடம்பெற்றுள்ளன. ஒலி அமைப்பும் டிஜிட்டல் தரத்தில் உள்ளது கூடுதல் சிறப்பம்சம்.

+ spodtronic  இதுவும் ஒரு அசத்தலான மென்பொருள்,ஆனால் இதில் தமிழை விட மற்ற மொழி இணைய வானொலிகளை தான் நாம் அதிகமாக கேட்க முடியும்,வந்த புதிதில் இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்த மென்பொருளை இப்போது காசு கொடுத்தால் தான் தருகிறார்கள். பாடலை கேட்கும் போதே பாடல் இடம்பெற்ற ஆல்பம்,பாடியவர்கள் விபரம்,பாடலை நாம் மதிப்பீடு செய்யும் முறை என்று அசத்துகிறார்கள்.

+ tunin fm  இது முழுக்க முழுக்க அயல்நாட்டு மேற்கத்திய இசையை விரும்புபவர்களுக்கான தளம்,மிகக்குறைந்த வேகத்தில் ஒலியின் தன்மை அற்புதமாக உள்ளது.

mundu radio  இந்தியாவில் உள்ள Geodesic Limited என்ற நிறுவனம் தரும் மொபைலுக்கான இணைய வானொலி மென்பொருள் இது. இப்போது மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலும் நூற்றுக்கணக்கான வானொலிகளை கேட்க முடியும்.

lavella radio  நூற்றுக்கும் மேற்பட்ட வானொலிகளை கேட்க முடியும்.இலவச மென்பொருள் தான், இருந்தாலும் இதில் காசு கொடுத்து வாங்கப்படும் மற்றொரு மென்பொருளில் தான் முழுமையான டிஜிட்டல் தரம் கிடைக்கும்.

nokia internet radio  நோக்கியாவின் சார்பில் அதன் பாவனையாளர்களுக்கு தரப்படும் இணைய வானொலி இலவச மென்பொருள் இது. பெரும்பாலும் போன்களிலேயே பதிந்து வரும். இல்லாதவர்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.சூப்பர் மென்பொருள் இது.

மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்ய சிறந்த தளங்கள்!

1
வசர யுகத்தில் நமது மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்வது கூட ஒரு கடினமான வேலையாகி வருகிறது. திடீரென்று காலை ஏழு மணிக்கெல்லாம் பாஸ் அவசர வேலையாக அலுவலகத்துக்கு அழைக்கிறார்.

வேகமாக அங்கு கிளம்பிச் சென்ற பிறகுதான் தெரிகிறது நமது மொபைலில் பேலன்ஸ் இல்லை என்பது.ஒன்பது மணிக்குத்தான் தெருமுனையில் இருக்கும் கடைக்காரன் கடையை திறப்பான், ஆனால் அவசரமாக பேசியாக வேண்டும்,கையில் பணம்,கிரெடிட் கார்டு,டெபிட் கார்டு போன்ற இத்யாதிகள் இருந்தும் நம்மால் உடனடியாக ரீ-சார்ஜ் செய்ய முடிவதில்லை.

இதற்கு தீர்வாக அமைவதுதான் இணையதளம் மூலம் நமது மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்து கொள்வது.இணைய உலகில் எதுவுமே சாத்தியமில்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு வசதிகள் வந்துவிட்டன.

அந்த வகையில் நமது மொபைலுக்கு ஆன்லைன் மூலமாக ரீ-சார்ஜ் செய்ய உதவும் மிகச்சிறந்த இணையதளங்களை இங்கே உங்களுக்காக பட்டியலிட்டுள்ளேன்.

rechargeitnow.com  ஹரியானா மாநிலம் குர்கானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது இந்த இணையதளம்.24 மணி நேரமும் உடனடியாக நமது மொபைலுக்கு டெபிட்,அல்லது கிரெடிட்கார்டை பயன்படுத்தி ஏர்டெல்,ஏர்செல்,வோடபோன்,பி,எஸ்,ஏன்,எல் உட்பட அனைத்து மொபைல் நிறுவன இணைப்புகளுக்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

மொபைல் மட்டுமல்லாமல் டாடாஸ்கை,டிஷ்டிவி,பிக்டிவி,வீடியோகான் உள்ளிட்ட டி.டி.ஹச் இணைப்புகளுக்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மிகவும்,பாதுகாப்பான விரைவான சேவைகளை வழங்குவதால் இந்த இணையதளத்தை அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள்.

பின்குறிப்பு : இங்கு உங்கள் நண்பர்களை அறிமுகப்படுத்தினால் இலவச ரீசார்ஜ் உட்பட பல பரிசு சலுகைகளும் உண்டாம்.

www.fastrecharge.com  சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 2007 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆன்லைன் ரீசார்ஜ் நிறுவனம் இது.ஏர்செல், ஏர்டெல்,வோடபோன்,ரிலையன்ஸ்,டாடாஇண்டிகாம்,பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட அனைத்து மொபைல் நிறுவன இணைப்புகளுக்கும்,வழக்கமான டி.டி.எச் இணைப்புகளுக்கும் நாம் இங்கே ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.இதன் முகப்புப் பக்கம் இன்னும் மேம்படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும்.

www.indianmobilerecharge.com  இதுவும் சென்னையை இடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் தான்.ஏர்செல்,ஏர்டெல்,வோடபோன் உள்ளிட்ட 11 மொபைல் நிறுவன இணைப்புகளுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். டி.டி.எச் சேவையில் தற்போதைக்கு டாடாஸ்கை,டிஷ்டிவி ஆகியவற்றுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்,கூடுதல் வசதியாக இதன் முகப்புப் பக்கத்தின் பேருந்து பயணத்துக்கு டிக்கெட் பதிவு செய்து கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் பக்க வடிவமைப்பும் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.

+   www.onestoprecharge.com  '100% திருப்தியான வாடிக்கையாளர்கள்' என்ற முத்திரையுடன் இயங்கி வரும் இந்த இணையதளம் கிட்டத்தட்ட எல்லா மொபைல் ஆப்ரேட்டர்களின் ரீசார்ஜ் சேவைகளையும்,எல்லா டி.டி.எச் நிறுவனங்களின் ரீசார்ஜ் சேவைகளையும் வழங்கி வருகிறது.

விரைவில் விமான டிக்கெட் பதிவு செய்வது,போஸ்ட்பெய்டு பில்களுக்கு பணம் செலுத்துவது, இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது போன்ற பிற வசதிகளையும் தர இருக்கிறார்கள்.

www.freecharge.in  'இந்தியாவின் நம்பர் ஒன் ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் இணையதளம்' என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வரும் இந்த இணைய தளத்தில் ரீசார்ஜ் இலவசம்.ஆமாம்,இந்த இணையத்தளத்தில் நீங்கள் பத்து ரூபாய் முதல் எவ்வளவு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்கிறீர்களோ அந்த பணத்தின் மதிப்புக்கு கொஞ்சம் அதிகமாகவே பிஸ்ஸாஹட்,குரோமா ரீடெயில், ஷாப்பர்ஸ்ஷாப் போன்ற வணிக நிறுவனங்களின் தள்ளுபடி கூப்பனை தந்து விடுகிறார்கள்.

கூப்பன்கள் உங்களுக்கு தேவையில்லை என்றால் நீங்கள் முழுமையான தொகைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.கூப்பன் வேண்டுமென்றால் அதற்கு டெலிவரி கட்டணமாக ஒரு கூப்பனுக்கு பத்து ரூபாய் வசூலிக்கிறார்கள். முழுக்க முழுக்க மொபைல் போன்களுக்கு மட்டுமே இங்கே ரீசார்ஜ் செய்ய முடியும்.மிகவும் பாதுகாப்பான,விரைவான ரீசார்ஜ் சேவையை வழங்கும் இணையதளங்களில் இதுவும் ஒன்றாகும்.

+   www.ezrecharge.in  குறைந்தது 25/- ரூபாய் முதல் இங்கே ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம்.எஸ்.எம்.எஸ் மூலம் ரீசார்ஜ் செய்வது,போன் மூலம் ரீசார்ஜ் செய்வது போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளும் இங்கு உண்டு.

www.justrechargeit.com  இதுவரை 63219 நபர்கள் பேஸ்புக் லைக் பட்டனில் சேர்ந்திருக்கிறார்கள்.கேஷ்கார்டு,டெபிட் கார்டு,கிரெடிட்கார்டு,முப்பதுக்கும் மேற்பட்ட வங்கிகளின் நேரடி வங்கி டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலமாகவும் இங்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.மிகவும் சிறப்பாக ரீசார்ஜ் செய்ய எளிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இணையதளம் இது.

http://www.anytimerecharge.com  freerecharge.in என்ற இணையதளத்தைப் போலவே இந்த இணையதளத்திலும் நாம் ரீ-சார்ஜ் செய்கின்ற பணத்தின் மதிப்புக்கு ஆன்லைனில் பொருட்களை வாங்க,தியேட்டரில் படம் பார்க்க,பேருந்து டிக்கெட் பதிவு செய்ய போன்ற அத்தியாவசியமான சேவைகளின் தள்ளுபடி கூப்பன்களை தருகிறார்கள்.

ஆனால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மொபைல் நிறுவனங்களின் ரீ-சார்ஜ் சேவைகள் தான் உள்ளன.ஏர்டெல், வீடியோகான், யூனிநார் போன்றவை இல்லை.

http://www.paytm.com  தொலைதொடர்பு நிறுவனங்களில் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கி வரும் one97 Communications நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்த இணையதளத்துக்கு சென்னை தி.நகரில் கூட அலுவலகம் உண்டு.

மொபைல்,டி.டி.எச் என இரண்டு சேவைகளுக்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். வாரத்தின் ஏழு நாட்களிலும் நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம், ரீ-சார்ஜ் செய்வதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்படும் என்று சத்தியம் செய்கிறார்கள்.

பின்குறிப்பு : என்னதான் சத்தியம் செய்யாத குறையாக சிறப்பான சேவைகளை நாங்கள் வழங்குகிறோம் என்று இவர்கள் சொன்னாலும் பொதுவாகவே இணையதளம் மூலமான பணப்பரிவர்த்தனைகளில் நாம் எப்போதுமே உஷாராக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வோம் நண்பர்களே...

அதென்ன ? S.M.S 2.0

0
மொபைல் வைத்திருப்பவர்கள் அடுத்தவர்களிடம் போனில் பேசுவதை விட குறுஞ்செய்தி என்று சொல்லப்படுகிற எஸ்.எம்.எஸ் அனுப்புவது தான் மிக அதிகமாக உள்ளது.காரணம் அந்தளவுக்கு எஸ்.எம்.எஸ்  அனுப்புவது மொபைல் உபயோகிப்பாளர்களிடம் பிரபலமாக உள்ளது.
நாம் பிசியான நேரங்களில் இருப்பதை நம்மை தொடர்பு கொள்பவருக்கு நாசுக்காக தெரிவிக்க இந்த குறுஞ் செய்தி சேவை உதவி செய்கிறது.

சில பேர்களிடம் நேரில் தெரிவிக்க முடியாத பல விஷயங்களை மொபைல் மூலம் தெரிவிக்க இந்த எஸ்.எம்.எஸ் சேவை உதவுகிறது. குறிப்பாக காதலிப்பவர்கள் மொபைலில் பேசுவதை விட எஸ்.எம்.எஸ் மூலமாக பேசிக்கொள்வதுதான் மிகமிக அதிகம்.இதற்கு காரணம் வேறு சொல்ல வேண்டுமா என்ன?

இப்படி மனித வாழ்க்கையில் கூடவே வரும், மௌனமாய் சாகசம் செய்யும் ஒருமனிதனைப் போல நம்மை பின் தொடர்வதுதான் மொபைல் எஸ்.எம்.எஸ் சேவை.அப்படிப்பட்ட எஸ்.எம்.எஸ் அனுபவத்தை நாம் இன்னும் புதுமையாக மேற்கொள்ள உதவுவது தான் Affle Limited நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும்  S.M.S 2.0

அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.

குறைந்தபட்சம் ஜி.பி.ஆர்.எஸ் வசதி கொண்ட கலர் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு கூட இந்த அப்ளிகேஷன் ஒரு புதுமையான எஸ்.எம்.எஸ் அனுப்பும் அனுபவத்தை தரும் என்றால் அது மிகையாகாது. காரணம் பொதுவாக நாம் ஒருவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும்போது மிகவும் சாதாரணமாக லெட்டர்களை மட்டுமே டைப் செய்து அனுப்புவோம்.ஆனால் இந்த அப்ளிகேஷனை நாம் நமது மொபைலில் பயன்படுத்துவதன் மூலம் கீழ்க்கண்ட வசதிகளை பெறலாம்.

1. லெட்டர்களை (TEXT) கலரில் டைப் செய்து அனுப்பலாம்.

2. உங்கள் குறுஞ்செய்தியை பெறுபவரின் மூடுக்கேற்ற மாதிரியான, அல்லது நீங்கள் அனுப்பும் செய்தியின் தன்மைக்கேற்ற 'Smileys' களை இணைத்து அனுப்பலாம்.

3. ஒவ்வொரு முறையும் குறுஞ்செய்தி அனுப்பும்போது அதன் பின்பக்கத்தின் வண்ணத்தை (BACKGROUND COLOUR) மாற்றி அனுப்பலாம்.

4. நீங்கள் நினைக்கும் நேரத்தில் தானாக எஸ்.எம்.எஸ் செல்லும்படி செட் செய்து அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.அதேபோல உங்கள் குறுஞ்செய்தியை இமெயிலாக மாற்றி அனுப்பலாம்.

5. இதில் இருக்கும் ஸர்ச் (SEARCH) வசதி மூலம் நாம் இணைய தேடல்,நீங்கள் வைத்திருக்கும் ஆபரேட்டர் தரும் வசதிகளை தேடும் வசதி,நகரத்தை தேடும் வசதி,வேலை தேடுதல்,வீட்டுமனை தேடுதல் போன்ற சேவைகளை மேற் கொள்ள முடியும்.

பின்குறிப்பு : இந்த அப்ளிகேஷன் முழுக்க முழுக்க இலவசம் தான். ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் லைவ் போர்ட்டலுக்கு சென்று அங்கேயும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.நோக்கியா, சோனிஎரிக்சன்,சாம்சங் கம்பெனிகளின் பெரும்பாலான மாடல்களை இந்த அப்ளிகேஷன் ஆதரிக்கிறது.எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் எஸ்.எம்.எஸ் பக்கத்திரையில் சினிமா, விளையாட்டு,அரசியல்,கல்வி,பேஷன்,வணிகம் சம்பந்தமான அன்றாட நிகழ்வுகளை செய்திகளாக படித்து மகிழலாம்.

ஆன்ட்ராய்டு போனில் அப்ளிகேஷனை பதிவது எப்படி?

0




ன்னதான் காய்கறிகளை மொத்தமா விக்குறதுக்குன்னே மார்க்கெட் தனியா இருந்தாலும் வீட்டுக்கு பக்கத்துல தள்ளுவண்டியில கொண்டு வர்றவர்கிட்ட நாம பேரம் பேசி காய்கறி வாங்குறதே சுகமே தனி தான்.

அதேமாதிரி தான் ஆன்ட்ராய்டு போனும்.

என்னதான் கூகுள் நிறுவனமே ஒரு லட்சத்துக்கும் மேல அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்யிறதுக்காக மொபைல்ல தனியா மார்க்கெட்(android market)  வச்சிருந்தாலும் நாம நம்ம மொபைல்ல சில மூன்றாம் தர (third party)  வர்க்கத்தோட அப்ளிகேஷன்களை பயன்படுத்த விரும்புவோம்.மொபைல்ல தேடுறத விட கணினியில அப்ளிகேஷன்களை தேடுறது இன்னும் சுலபம். அதுமட்டுமில்லாம மொபைல்ல தரவிறக்கம் செய்யிறதை விட கணினியில தரவிறக்கம் செய்யுறதுனாலது நேரமும் மிச்சமாகும்.

இப்போ கணினி மூலமா ஒரு அப்ளிகேஷனை தரவிறக்கம் செஞ்ச பின்னாடி அதை எப்படி ஆன்ட்ராய்டு போன்ல பதியிறதுன்னு உங்கள்ல நிறைய பேருக்கு குழப்பமா இருக்கலாம். ஆனா ரொம்ப எளிமைதான். நோக்கியா போன்களில் அது தரும் கணினி சூட் (NOKIA PC SUITE) மூலமா அப்ளிகேஷன்களை நேரடியா மொபைல்ல பதிவு செய்ய முடியும். ஆனால் ஆன்ட்ராய்டு போன்களில் அப்படி பண்ண முடியாது.

அதுக்குப்பதிலா இன்னொரு வழிமுறை இருக்கு.அந்த வழிமுறையை இங்க பாக்கலாம்.

நாம கணினி மூலமா தரவிறக்கம் செய்யிற பெரும்பாலான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் ஜிப் (ZIP) ஃபைலாகத்தான் வரும்.அதனால முதல்ல தரவிறக்கம் செய்த அப்கேஷனை (extract here) பிரித்தெடுத்து கணினியில் சேமித்துக் கொள்ளவும்.

உதாரணமா நீங்க தரவிறக்கம் செய்த அப்ளிகேஷன் barcode scanner என்ற அப்ளிகேஷனாக இருந்தால் அதை பிரித்தெடுத்த பின்பு barcode scanner. 3.2.apk என்று இருக்கும். இதில் 3.2 என்பது அந்த அப்ளிகேஷனின்  (version) வெர்ஷனை குறிக்கும். நீங்கள் தரவிறக்கம் செய்த எல்லா ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்களும் apk என்றுதான் முடியும்.

இப்போது நீங்கள் போனில் உள்ள மெமரிகார்டை தனியா கழற்றி உங்க கணினியில் இணைத்து அந்த மெமரிகார்டில் நீங்கள் தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் அப்ளிகேஷன்கள் எல்லாவற்றையும் சேமித்துக் கொள்ளவும்.

பிறகு மெமரிகார்டை கணிணியில இருந்து வெளியில் எடுத்து அதை உங்க போனில் சொருகி போனை ஆன் செய்து உங்கள் போனில் மெமரி கார்டில் உள்ளவற்றை காட்டும் அப்ளிகேஷனை  (சாம்சங் போனில் my files என்றிருக்கும்.) திறந்து பார்த்தால் அங்கே நீங்கள் கணினியிலிருந்து மெமரி கார்டுக்கு மாற்றிய அப்ளிகேஷன்கள் எல்லாமும் இருக்கும்.அதை ஒவ்வொன்றாக அழுத்தி உங்கள் போனில் பதியுங்கள்.

அப்படி எல்லாவற்றையும் பதிந்த பிறகு இப்போது உங்கள் போனில் உள்ள மெனுவைப் பாருங்கள் நீங்கள் பதிந்த அப்ளிகேஷன்கள் எல்லாமும் திரையில் காட்சியளிக்கும்.இப்போது அவைகளை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த விளக்கம் உங்களுக்கு புரியாத பட்சத்தில் எனக்கு போன் செய்யுங்கள் உங்களுக்கு தேவையான விளக்கங்களை அளிக்கிறேன்.

பின்குறிப்பு : இந்த வழியில் அடிக்கடி மெமரிகார்டை வெளியில் எடுக்க சிரமமாயிருந்தால் உங்கள் போனை mass storage மோடில் கணினியில் இணைத்து காட்டப்படும் மெமரி கார்டின் அளவில் உங்கள் அப்ளிகேஷன்களை சேமித்துக்கொண்டு அதன் பிறகு போனை தனியாக எடுத்து அப்ளிகேஷன்களை போனில் பதியலாம்.