Showing posts with label application. Show all posts

கூகுள் + ஐ மொபைலில் பயன்படுத்துவது எப்படி?

0
மீபகாலமாக ஃபேஸ்புக்,டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இணைய தள ரசிகர்களிடையே தவிர்க்க முடியாத,பெரும் வரவேற்பை பெற்று வருது. எகிப்துல மக்கள் புரட்சி நடக்க மிக முக்கிய பங்காளனா இருந்தது இந்த ரெண்டு சமூக வலைத் தளங்களும் தான். இந்த வரவேற்பை ரொம்பவே கூர்ந்து கவனிச்சு கூகுள் நிறுவனம் அறிமுகப்
படுத்தியிருக்கும் ஒரு புதிய சோஷியல் நெட்வொர்க் தளம் தான் ‘கூகுள் பிளஸ்'.

இப்போ சோதனை ஓட்டமா இதை அறிமுகப்படுத்தியிருக்குது கூகுள்.காரணம் கூகுளோட ரசிகர்கள் இதுல ஏதேனும் குறைகளை சொன்னா அதை நிவர்த்தி பண்ணி அப்புறமா ஒரு முழுமையான தளமா குடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கு. கூடிய சீக்கிரம் இதுல இருக்குற சின்ன சின்ன குறைகளை எல்லாம் நிவர்த்தி பண்ணி ஃபேஸ்புக் ,டிவிட்டருக்கு நிகரா ‘கூகுள் பிளஸ்’ வரும்னு நாம நம்பலாம்.

ஜிமெயிலை அறிமுகப்படுத்தின புதுசுல எப்படி அதை ஏற்கனவே யூஸ் பண்ணுற ஒருத்தர் நம்மளை இன்வைட் பண்ணினா அதை பயன்படுத்த முடியும்கிற மாதிரி கூகுள் பண்ணிச்சோ அதே நிலமை தான் கூகுள் பிளஸ்க்கும்.ஆமாம்,நாம கூகுள் பிளஸ் தளத்தை முழுமையா பயன் படுத்தனும்னா அதை ஏற்கவே யூஸ் பண்ணுற நண்பர் யாராவது ஒருத்தர் நமக்கு இமெயில்ல இன்வைட் அனுப்பனும். அப்போதாம் நாம யூஸ் பண்ண முடியும்.

சரி டெஸ்க்டாப்,லேப்டாப்ல கூகுள் பிளஸ் ஈஸியா பயன்படுத்தலாம். மொபைல்ல அது சாத்தியமா?

கண்டிப்பா சாத்தியம் தான். ஆனா அதிலேயும் இன்னும் முழுமை இல்லை. இருந்தாலும் முடிஞ்சவரைக்கும் மொபைல்ல ‘கூகுள்பிளஸ்’ ஐ எப்படி பயன்படுத்தலாம்னு இங்க பாக்கலாம்.நீங்க ஆன்ட்ராய்டு ஓ.எஸ் உள்ள மொபைல்ல 2.1 இல்லேன்னா அதுக்கும் மேல உள்ள வெர்ஷன் வெச்சிருந்தீங்கன்னா முதல்ல உங்களோட ஆன்ட்ராய்டு மார்க்கெட்டை அப்டேட் பண்ணிட்டு அப்புறம் அங்க இருக்குற சர்ச் பாக்ஸ்ல google+ ன்னு டைப் பண்ணி தேடுனீங்கன்னா வர்ற அப்ளிகேஷன்கள்ல முதல் அப்ளிகேஷன் அதுவாத்தான் இருக்கும். அதை கிளிக் பண்ணி இன்ஸ்டால் பண்ணி நீங்க யூஸ் பண்ண ஆரம்பிக்கலாம்.

google + barcode
இல்லேன்னா உங்க மொபைல்ல இங்க இருக்குற பார்கோடை(மேலே உள்ள படத்தை பார்க்கவும்!) capture பண்ணுனீங்கன்னா வர்ற லிங்ல போயி அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்யலாம். பார்கோடை capture பண்ண உங்க மொபைல்ல barcode reader அல்லது barcode scanner அப்ளிகேஷன் கண்டிப்பா இருக்கணும். இல்லேன்னா மார்க்கெட்டுல போயி இலவசமா தரவிறக்கம் செஞ்சிக்கங்க.

ஆனா இப்போதைக்கு அமெரிக்காவுல இருக்குற ஆன்ட்ராய்டு மொபைல் களுக்கு மட்டும் தான் இந்த தனிப்பட்ட அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்யக்கூடிய வசதி இருக்குன்னு கூகுள் சொல்லியிருக்கு. மத்த நாட்டுல உள்ளவங்க அவங்க மொபைலோட ப்ரௌசர்ல m.google.com/plus ன்னு அட்ரஸ் டைப் பண்ணி கூகுள் பிளஸ் ஐ யூஸ் பண்ண முடியுமாம். அதெப்படி அவிங்க மட்டும் தனி அப்ளிகேஷனா பயன்படுத்தலாம். நம்மளால முடியாதான்னு நீங்க கேக்கலாம்.கண்டிப்பா முடியும்

எப்படி ? ரொம்ப சிம்பிள், உங்க கணிணியில ஆன்லைன்ல போயிட்டு இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க, அப்புறமா ஓபன் ஆகுற பக்கத்துல நடுவுல view ன்னு இருக்குறதை கிளிக் பண்ணுனா உங்க ஆன்ட்ராய்டு போனுக்கான ‘கூகுள் பிளஸ்’ அப்ளிகேஷன் டவுன்லோடு ஆகும்.அதை அப்படியே உங்க மொபைல இன்ஸ்டால் பண்ணி நீங்க பயன்படுத்தலாம்.

இப்போதைக்கு ஆன்ட்ராய்டு ஒ.எஸ் மொபைல்களுக்கும் ஆப்பிள் ஐ-போனுக்கு மட்டும் தான் இந்த தனி அப்ளிகேஷன் வந்திருக்கு. அடுத்ததா சிம்பியன் ஓ.எஸ்,பிளக்பெர்ரி ஓ.எஸ், விண்டோஸ் மொபைல் ஓ.எஸ் ல சீக்கிரம் வரப்போவுது. இந்த ஓ.எஸ் களுக்கான ‘கூகுள் பிளஸ்’ தனி அப்ளிகேஷனும், எஸ்.எம்.எஸ் மூலமா ‘கூகுள் பிளஸ்’ ஐ பயன்படுத்துற வசதியும் கொஞ்சம் லேட்டா வரும்.

ஆப்பிள் ஐ- போனுக்கு கூகுள் பிளஸ் அப்ளிகேஷன் இப்போது அதன் மார்க்கெட்டில் கிடைக்கிறது, தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்.

மொபைலுக்கான இணைய வானொலிகள்!

1

மொபைல் போன் வழியாக இணையதளங்களை பயன்படுத்தும் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.ஒரு வழியாக இந்தியாவிலும் 3ஜி எனப்படுகிற மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தை சென்னை உட்பட இந்தியாவின் பெருநகரங்களில் பி.எஸ்.என்.எல், ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ரிலையன்ஸ்,டோகோமோ என அனைத்து மொபைல் ஆப்பரேட்டர் நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி யிருப்பதால் மொபைல் பாவனையாளர்கள் மிக அதிக அளவில் அந்த 3ஜி சேவையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

அதேபோல் மொபைல் மூலமாக இணைய வானொலிகளையும் நாம் பயன்படுத்தி அதன்மூலம் உலகம் முழுக்க இருக்கின்ற தமிழ் உட்பட பல மொழிகளில் உள்ள வானொலிகளை 24மணி நேரமும் நாம் நமது மொபைலில் டிஜிட்டல் ஒலிதரத்தில் கேட்க முடியும்.

இதற்கு GPRS மற்றும் EDGE தொழில்நுட்ப வேகம் இருந்தால் போதும், நாம் இணையதள வானொலி சேவைகளை கேட்க முடியும்.என்றாலும் 3ஜி தொழில்நுட்பம் இருந்தால் தடையில்லா (buffering problem) வானொலி சேவைகளை கேட்க முடியும். அது இன்னும் சிறப்பாக இருக்கும்.

இந்த இணையதள வானொலி சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவே நமக்கு பல்வேறு நிறுவனங்கள் இலவச மொபைல் அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. அவற்றை நாம் நமது மொபைல் போன்களில் பதிந்து கொண்டால் ஒரு புதிய இசை உலகை நீங்கள் காணலாம்.

பின்குறிப்பு : பின்வரும் வானொலிகளின் பெயர்களின் மேலே "கிளிக்" செய்து அந்தந்த வானொலிகளின் இணையதளங்களில் சென்று சொல்லப்படும் வழிமுறைகளை பின்பற்றி அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

virtual radio  இந்த மென்பொருளில் 300 க்கும் மேற்பட்ட மொழி வாரியான வானொலிகளை கேட்கலாம்.குறிப்பாக தமிழ் வானொலிகள் அதிகம் இதில் இடம்பெற்றுள்ளன. ஒலி அமைப்பும் டிஜிட்டல் தரத்தில் உள்ளது கூடுதல் சிறப்பம்சம்.

+ spodtronic  இதுவும் ஒரு அசத்தலான மென்பொருள்,ஆனால் இதில் தமிழை விட மற்ற மொழி இணைய வானொலிகளை தான் நாம் அதிகமாக கேட்க முடியும்,வந்த புதிதில் இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்த மென்பொருளை இப்போது காசு கொடுத்தால் தான் தருகிறார்கள். பாடலை கேட்கும் போதே பாடல் இடம்பெற்ற ஆல்பம்,பாடியவர்கள் விபரம்,பாடலை நாம் மதிப்பீடு செய்யும் முறை என்று அசத்துகிறார்கள்.

+ tunin fm  இது முழுக்க முழுக்க அயல்நாட்டு மேற்கத்திய இசையை விரும்புபவர்களுக்கான தளம்,மிகக்குறைந்த வேகத்தில் ஒலியின் தன்மை அற்புதமாக உள்ளது.

mundu radio  இந்தியாவில் உள்ள Geodesic Limited என்ற நிறுவனம் தரும் மொபைலுக்கான இணைய வானொலி மென்பொருள் இது. இப்போது மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலும் நூற்றுக்கணக்கான வானொலிகளை கேட்க முடியும்.

lavella radio  நூற்றுக்கும் மேற்பட்ட வானொலிகளை கேட்க முடியும்.இலவச மென்பொருள் தான், இருந்தாலும் இதில் காசு கொடுத்து வாங்கப்படும் மற்றொரு மென்பொருளில் தான் முழுமையான டிஜிட்டல் தரம் கிடைக்கும்.

nokia internet radio  நோக்கியாவின் சார்பில் அதன் பாவனையாளர்களுக்கு தரப்படும் இணைய வானொலி இலவச மென்பொருள் இது. பெரும்பாலும் போன்களிலேயே பதிந்து வரும். இல்லாதவர்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.சூப்பர் மென்பொருள் இது.

மொபைலுக்கான இலவச தரவிறக்க தளங்கள்!

2
மது மொபைலுக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ்,வீடியோக்கள், அப்ளிகேஷன்கள் ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டு மானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.கீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

www.zedge.com  வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று உங்கள் போனுக்கு தேவையான எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அதற்கு நீங்கள் இதில் மெம்பராகி மொபைல் மாடலையும் தேர்வு செய்துவிட்டு வேலையை ஆரம்பிக்கலாம். அதிகபட்ச நிறுவனங்களின் பலதரப்பட்ட மாடல் மொபைல்களுக்கு இங்கே எல்லாமும் கிடைக்கிறது.அது மட்டுமல்லாமல் நேரடியாக உங்கள் மொபைலிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.அதற்கு உங்கள் மொபைலின் பிரவுசரில் http://m.zedge.net  என்று டைப் செய்து இணையலாம்.

www.gallery.mobile9.com  நமது மொபைலுக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ், வீடியோக்கள், ரிங்டோன்கள்,தீம்ஸ்,அப்ளிகேஷன்கள் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் மெம்பராகவில்லை என்றால் ஒவ்வொரு தரவிறக்கத்துக்கும் குறைந்தது 10 நொடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும்,அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.பின்பு தரவிறக்கம் செய்ய ஆரம்பியுங்கள்.மேலும் இந்த தளத்தில் உங்களிடம் இருப்பவற்றையும் தரவேற்றம் செய்து மற்றவர்களின் பார்வைக்கும் வைக்கலாம்.

www.getjar.com  முழுக்க முழுக்க ஜாவா,மற்றும் சிம்பியன் வகையை சார்ந்த போன்களுக்கான கேம்ஸ்,அப்ளிகேஷன்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் தளம் இது. பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மென்பொருட்கள்  உள்ளன. மெம்பராகாமல் நேரடியாக தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்.மொபைலில் நேரடியாக தரவிறக்கம் செய்ய உங்கள் மொபைலின் பிரவுசரில் http://m.getjar.net என்று டைப் செய்து இணையலாம்.

http://www.apniapps.com  ஐ-போன்,சிம்பியன்,ஜாவா வகையை சேர்ந்த போன்களுக்கான அப்ளிகேஷன்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அப்ளிகேஷனைப் பற்றிய சிறுகுறிப்பும் உள்ளது, அதை படித்து பார்த்து உங்கள் போனுக்கு தேவையானால் அதை  தேர்ந்தேடுக்கலாம்.

http://www.mobilemastee.com  வால்பேப்பர்கள், கேம்ஸ், வீடியோக்கள், ரிங்டோன்கள், தீம்ஸ்,அப்ளிகேஷன்கள்,ஸ்க்ரீன்சேவர்ஸ் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மெம்பராக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

http://dailymobile.se  ஐ-போன்,சிம்பியன்,ஜாவா,ஆன்ட்ராய்டு வகையை சேர்ந்த மொபைல்களுக்கு வால்பேப்பர்கள், கேம்ஸ்,தீம்ஸ்,மென்பொருட்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.முக்கியமாக இதில் முதலில் மெம்பரான பிறகுதான் தரவிறக்கம் செய்ய முடியும்.அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.கூடுதலாக மொபைல் உலகில் வந்திருக்கும் புதிய சம்மாச்சரங்கள் அனைத்தையும் இந்ததளம் உடனுக்குடன் நமக்கு தருகிறது.

http://www.ipmart-forum.com  இந்த தளத்தில் 'Fun,Games and Entertaining' என்ற பிரிவில் சென்று நீங்கள் வைத்திருக்கும் எந்தவகை மாடலுக்கும் தேவையான தரவிறக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.தரவிறக்கத்தை ஆரம்பிக்க முதலில் இதில் மெம்பராக வேண்டும்.புதிய அப்ளிகேஷன்களையும்,அப்டேட் செய்யப்பட்ட பழைய அப்ளிகேஷன்களையும் உடனுக்குடன் தருகிறார்கள். விலை கொடுத்து வாங்க வேண்டிய அப்ளிகேஷன்கள் கூட இங்கே இலவசம் தான்.

http://www.youpark.com  ஜாவா,சிம்பியன்,விண்டோஸ்,பாம்,பிளாக்பெர்ரி
ஆன்ட்ராய்டு வகை போன்களுக்கு தேவையான அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்துகொள்ள இந்ததளம் உதவுகிறது.இலவச,மற்றும் காசு கொடுத்து வாங்கக்கூடிய மென்பொருட்களை பட்டியலிட்டுள்ளார்கள்.காசு கொடுத்து வாங்கினால் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள்.மெம்பராக வேண்டும் என்று கட்டாயமில்லை.ஏதாவது இலவச மென்பொருளை தரவிக்கம் செய்ய நினைத்தால் உங்கள் இ-மெயில் முகவரியை கொடுத்துவிட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.உங்கள் மொபைல் வழியாக http://wab.youpark.com என்ற முகவரியில் நேரடியாக இணையலாம்.