மொபைலில் தமிழ்தளங்களை வாசிக்க எளிய வழி!
5
![]() |
ஐ-போனில் தமிழ் வாசிக்கலாம் |
அதற்கு தீர்வாக அமைவது தான் opera mini browser
இந்த அப்ளிகேஷனில் ஒரே ஒரு மாறுதலை செய்வதன் மூலம் நாம் நமது மொபைலில் தமிழ் இணையதளங்களை அழகான தமிழில் வாசிக்க முடியும்.
முதலில் உங்கள் மொபைல் ப்ரௌசரில் http://www. opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.
operamini - ஐ தரவிறக்க செய்ய இங்கே அழுத்தவும் இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த பிறகு...
1. opera mini browser - ஐ ஓபன் செய்யவும்
2. அட்ரஸ் பாரில் opera:config என்று மட்டும் டைப் செய்து ஒகே கொடுக்கவும். (http://www என்று டிஃபால்ட்டாக தெரியும் எழுத்துக்களை நீக்கி விட வேண்டும்)
![]() |
இந்த மாறுதலை செய்தாலே போதும் |
4. பிறகு opera mini - ஐ யை restart செய்யவும். இனி எல்லா தமிழ் இணையதளங்களையும் நீங்கள் உங்கள் மொபைலில் வாசிக்கலாம்.
இப்போதைக்கு மொபைலில் இப்படித்தான் நாம் தமிழ் இணையதளங்களை வாசிக்க முடியும்.மேலும் operamini பிரௌசர் பெரும்பாலான மொபைல்களுக்கு சப்போர்ட் செய்வதால் இது சாத்தியமாகிறது
பின்குறிப்பு : ஆப்பிள் ஐ-போனில் முன்னிருப்பாக (default) உள்ள ப்ரௌசரில் தமிழ்தளங்களை அழகாக வாசிக்க முடியும்,மேலும் தமிழில் எஸ்.எம்.எஸ் கூட அனுப்ப முடியும்.அதற்கு அப்-ஸ்டோரில் உள்ள இலவச தமிழ் எஸ்.எம்.எஸ் அப்ளிகேஷனை நீங்கள் தரவிறக்கம் செய்தால் போதும்.
கூகுளின் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் விரைவில் தமிழ்மொழி சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் வேலைகள் நடைபெற்று வருகிறது. வெகுவிரைவில் அதன் அப்டேட் வெர்ஷன்களில் இந்த வசதியை நாம் பெறலாம்.அதனால் இப்போது மொபைல் பாவனையாளர்களிடையே பிரபலமாகியிருக்கும் ஆன்ட்ராய்டு ஆபரேட்டிங்கில் தமிழ் வருவதன் மூலம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நல்ல நிலை உருவாகலாம்.