மொபைலுக்கான இலவச தரவிறக்க தளங்கள்!

1
மது மொபைலுக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ்,வீடியோக்கள், அப்ளிகேஷன்கள் ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டு மானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.கீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

www.zedge.com  வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று உங்கள் போனுக்கு தேவையான எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அதற்கு நீங்கள் இதில் மெம்பராகி மொபைல் மாடலையும் தேர்வு செய்துவிட்டு வேலையை ஆரம்பிக்கலாம். அதிகபட்ச நிறுவனங்களின் பலதரப்பட்ட மாடல் மொபைல்களுக்கு இங்கே எல்லாமும் கிடைக்கிறது.அது மட்டுமல்லாமல் நேரடியாக உங்கள் மொபைலிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.அதற்கு உங்கள் மொபைலின் பிரவுசரில் http://m.zedge.net  என்று டைப் செய்து இணையலாம்.

www.gallery.mobile9.com  நமது மொபைலுக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ், வீடியோக்கள், ரிங்டோன்கள்,தீம்ஸ்,அப்ளிகேஷன்கள் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் மெம்பராகவில்லை என்றால் ஒவ்வொரு தரவிறக்கத்துக்கும் குறைந்தது 10 நொடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும்,அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.பின்பு தரவிறக்கம் செய்ய ஆரம்பியுங்கள்.மேலும் இந்த தளத்தில் உங்களிடம் இருப்பவற்றையும் தரவேற்றம் செய்து மற்றவர்களின் பார்வைக்கும் வைக்கலாம்.

www.getjar.com  முழுக்க முழுக்க ஜாவா,மற்றும் சிம்பியன் வகையை சார்ந்த போன்களுக்கான கேம்ஸ்,அப்ளிகேஷன்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் தளம் இது. பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மென்பொருட்கள்  உள்ளன. மெம்பராகாமல் நேரடியாக தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்.மொபைலில் நேரடியாக தரவிறக்கம் செய்ய உங்கள் மொபைலின் பிரவுசரில் http://m.getjar.net என்று டைப் செய்து இணையலாம்.

http://www.apniapps.com  ஐ-போன்,சிம்பியன்,ஜாவா வகையை சேர்ந்த போன்களுக்கான அப்ளிகேஷன்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அப்ளிகேஷனைப் பற்றிய சிறுகுறிப்பும் உள்ளது, அதை படித்து பார்த்து உங்கள் போனுக்கு தேவையானால் அதை  தேர்ந்தேடுக்கலாம்.

http://www.mobilemastee.com  வால்பேப்பர்கள், கேம்ஸ், வீடியோக்கள், ரிங்டோன்கள், தீம்ஸ்,அப்ளிகேஷன்கள்,ஸ்க்ரீன்சேவர்ஸ் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மெம்பராக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

http://dailymobile.se  ஐ-போன்,சிம்பியன்,ஜாவா,ஆன்ட்ராய்டு வகையை சேர்ந்த மொபைல்களுக்கு வால்பேப்பர்கள், கேம்ஸ்,தீம்ஸ்,மென்பொருட்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.முக்கியமாக இதில் முதலில் மெம்பரான பிறகுதான் தரவிறக்கம் செய்ய முடியும்.அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.கூடுதலாக மொபைல் உலகில் வந்திருக்கும் புதிய சம்மாச்சரங்கள் அனைத்தையும் இந்ததளம் உடனுக்குடன் நமக்கு தருகிறது.

http://www.ipmart-forum.com  இந்த தளத்தில் 'Fun,Games and Entertaining' என்ற பிரிவில் சென்று நீங்கள் வைத்திருக்கும் எந்தவகை மாடலுக்கும் தேவையான தரவிறக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.தரவிறக்கத்தை ஆரம்பிக்க முதலில் இதில் மெம்பராக வேண்டும்.புதிய அப்ளிகேஷன்களையும்,அப்டேட் செய்யப்பட்ட பழைய அப்ளிகேஷன்களையும் உடனுக்குடன் தருகிறார்கள். விலை கொடுத்து வாங்க வேண்டிய அப்ளிகேஷன்கள் கூட இங்கே இலவசம் தான்.

http://www.youpark.com  ஜாவா,சிம்பியன்,விண்டோஸ்,பாம்,பிளாக்பெர்ரி
ஆன்ட்ராய்டு வகை போன்களுக்கு தேவையான அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்துகொள்ள இந்ததளம் உதவுகிறது.இலவச,மற்றும் காசு கொடுத்து வாங்கக்கூடிய மென்பொருட்களை பட்டியலிட்டுள்ளார்கள்.காசு கொடுத்து வாங்கினால் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள்.மெம்பராக வேண்டும் என்று கட்டாயமில்லை.ஏதாவது இலவச மென்பொருளை தரவிக்கம் செய்ய நினைத்தால் உங்கள் இ-மெயில் முகவரியை கொடுத்துவிட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.உங்கள் மொபைல் வழியாக http://wab.youpark.com என்ற முகவரியில் நேரடியாக இணையலாம்.

1 comment:

  1. Thanks for these information
    If you want to download free ringtones for mobile, visit here :
    http://bestringtones.mobi/sms-message-tones/,
    . Download more 10000+ hot ringtones now: http://bestringtones.mobi/zedge-ringtones/,

    ReplyDelete