கூகுள் + ஐ மொபைலில் பயன்படுத்துவது எப்படி?

0
மீபகாலமாக ஃபேஸ்புக்,டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இணைய தள ரசிகர்களிடையே தவிர்க்க முடியாத,பெரும் வரவேற்பை பெற்று வருது. எகிப்துல மக்கள் புரட்சி நடக்க மிக முக்கிய பங்காளனா இருந்தது இந்த ரெண்டு சமூக வலைத் தளங்களும் தான். இந்த வரவேற்பை ரொம்பவே கூர்ந்து கவனிச்சு கூகுள் நிறுவனம் அறிமுகப்
படுத்தியிருக்கும் ஒரு புதிய சோஷியல் நெட்வொர்க் தளம் தான் ‘கூகுள் பிளஸ்'.

இப்போ சோதனை ஓட்டமா இதை அறிமுகப்படுத்தியிருக்குது கூகுள்.காரணம் கூகுளோட ரசிகர்கள் இதுல ஏதேனும் குறைகளை சொன்னா அதை நிவர்த்தி பண்ணி அப்புறமா ஒரு முழுமையான தளமா குடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கு. கூடிய சீக்கிரம் இதுல இருக்குற சின்ன சின்ன குறைகளை எல்லாம் நிவர்த்தி பண்ணி ஃபேஸ்புக் ,டிவிட்டருக்கு நிகரா ‘கூகுள் பிளஸ்’ வரும்னு நாம நம்பலாம்.

ஜிமெயிலை அறிமுகப்படுத்தின புதுசுல எப்படி அதை ஏற்கனவே யூஸ் பண்ணுற ஒருத்தர் நம்மளை இன்வைட் பண்ணினா அதை பயன்படுத்த முடியும்கிற மாதிரி கூகுள் பண்ணிச்சோ அதே நிலமை தான் கூகுள் பிளஸ்க்கும்.ஆமாம்,நாம கூகுள் பிளஸ் தளத்தை முழுமையா பயன் படுத்தனும்னா அதை ஏற்கவே யூஸ் பண்ணுற நண்பர் யாராவது ஒருத்தர் நமக்கு இமெயில்ல இன்வைட் அனுப்பனும். அப்போதாம் நாம யூஸ் பண்ண முடியும்.

சரி டெஸ்க்டாப்,லேப்டாப்ல கூகுள் பிளஸ் ஈஸியா பயன்படுத்தலாம். மொபைல்ல அது சாத்தியமா?

கண்டிப்பா சாத்தியம் தான். ஆனா அதிலேயும் இன்னும் முழுமை இல்லை. இருந்தாலும் முடிஞ்சவரைக்கும் மொபைல்ல ‘கூகுள்பிளஸ்’ ஐ எப்படி பயன்படுத்தலாம்னு இங்க பாக்கலாம்.நீங்க ஆன்ட்ராய்டு ஓ.எஸ் உள்ள மொபைல்ல 2.1 இல்லேன்னா அதுக்கும் மேல உள்ள வெர்ஷன் வெச்சிருந்தீங்கன்னா முதல்ல உங்களோட ஆன்ட்ராய்டு மார்க்கெட்டை அப்டேட் பண்ணிட்டு அப்புறம் அங்க இருக்குற சர்ச் பாக்ஸ்ல google+ ன்னு டைப் பண்ணி தேடுனீங்கன்னா வர்ற அப்ளிகேஷன்கள்ல முதல் அப்ளிகேஷன் அதுவாத்தான் இருக்கும். அதை கிளிக் பண்ணி இன்ஸ்டால் பண்ணி நீங்க யூஸ் பண்ண ஆரம்பிக்கலாம்.

google + barcode
இல்லேன்னா உங்க மொபைல்ல இங்க இருக்குற பார்கோடை(மேலே உள்ள படத்தை பார்க்கவும்!) capture பண்ணுனீங்கன்னா வர்ற லிங்ல போயி அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்யலாம். பார்கோடை capture பண்ண உங்க மொபைல்ல barcode reader அல்லது barcode scanner அப்ளிகேஷன் கண்டிப்பா இருக்கணும். இல்லேன்னா மார்க்கெட்டுல போயி இலவசமா தரவிறக்கம் செஞ்சிக்கங்க.

ஆனா இப்போதைக்கு அமெரிக்காவுல இருக்குற ஆன்ட்ராய்டு மொபைல் களுக்கு மட்டும் தான் இந்த தனிப்பட்ட அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்யக்கூடிய வசதி இருக்குன்னு கூகுள் சொல்லியிருக்கு. மத்த நாட்டுல உள்ளவங்க அவங்க மொபைலோட ப்ரௌசர்ல m.google.com/plus ன்னு அட்ரஸ் டைப் பண்ணி கூகுள் பிளஸ் ஐ யூஸ் பண்ண முடியுமாம். அதெப்படி அவிங்க மட்டும் தனி அப்ளிகேஷனா பயன்படுத்தலாம். நம்மளால முடியாதான்னு நீங்க கேக்கலாம்.கண்டிப்பா முடியும்

எப்படி ? ரொம்ப சிம்பிள், உங்க கணிணியில ஆன்லைன்ல போயிட்டு இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க, அப்புறமா ஓபன் ஆகுற பக்கத்துல நடுவுல view ன்னு இருக்குறதை கிளிக் பண்ணுனா உங்க ஆன்ட்ராய்டு போனுக்கான ‘கூகுள் பிளஸ்’ அப்ளிகேஷன் டவுன்லோடு ஆகும்.அதை அப்படியே உங்க மொபைல இன்ஸ்டால் பண்ணி நீங்க பயன்படுத்தலாம்.

இப்போதைக்கு ஆன்ட்ராய்டு ஒ.எஸ் மொபைல்களுக்கும் ஆப்பிள் ஐ-போனுக்கு மட்டும் தான் இந்த தனி அப்ளிகேஷன் வந்திருக்கு. அடுத்ததா சிம்பியன் ஓ.எஸ்,பிளக்பெர்ரி ஓ.எஸ், விண்டோஸ் மொபைல் ஓ.எஸ் ல சீக்கிரம் வரப்போவுது. இந்த ஓ.எஸ் களுக்கான ‘கூகுள் பிளஸ்’ தனி அப்ளிகேஷனும், எஸ்.எம்.எஸ் மூலமா ‘கூகுள் பிளஸ்’ ஐ பயன்படுத்துற வசதியும் கொஞ்சம் லேட்டா வரும்.

ஆப்பிள் ஐ- போனுக்கு கூகுள் பிளஸ் அப்ளிகேஷன் இப்போது அதன் மார்க்கெட்டில் கிடைக்கிறது, தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்.

0 comments: