ஆன்ட்ராய்டு போனில் அப்ளிகேஷனை பதிவது எப்படி?

0




ன்னதான் காய்கறிகளை மொத்தமா விக்குறதுக்குன்னே மார்க்கெட் தனியா இருந்தாலும் வீட்டுக்கு பக்கத்துல தள்ளுவண்டியில கொண்டு வர்றவர்கிட்ட நாம பேரம் பேசி காய்கறி வாங்குறதே சுகமே தனி தான்.

அதேமாதிரி தான் ஆன்ட்ராய்டு போனும்.

என்னதான் கூகுள் நிறுவனமே ஒரு லட்சத்துக்கும் மேல அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்யிறதுக்காக மொபைல்ல தனியா மார்க்கெட்(android market)  வச்சிருந்தாலும் நாம நம்ம மொபைல்ல சில மூன்றாம் தர (third party)  வர்க்கத்தோட அப்ளிகேஷன்களை பயன்படுத்த விரும்புவோம்.மொபைல்ல தேடுறத விட கணினியில அப்ளிகேஷன்களை தேடுறது இன்னும் சுலபம். அதுமட்டுமில்லாம மொபைல்ல தரவிறக்கம் செய்யிறதை விட கணினியில தரவிறக்கம் செய்யுறதுனாலது நேரமும் மிச்சமாகும்.

இப்போ கணினி மூலமா ஒரு அப்ளிகேஷனை தரவிறக்கம் செஞ்ச பின்னாடி அதை எப்படி ஆன்ட்ராய்டு போன்ல பதியிறதுன்னு உங்கள்ல நிறைய பேருக்கு குழப்பமா இருக்கலாம். ஆனா ரொம்ப எளிமைதான். நோக்கியா போன்களில் அது தரும் கணினி சூட் (NOKIA PC SUITE) மூலமா அப்ளிகேஷன்களை நேரடியா மொபைல்ல பதிவு செய்ய முடியும். ஆனால் ஆன்ட்ராய்டு போன்களில் அப்படி பண்ண முடியாது.

அதுக்குப்பதிலா இன்னொரு வழிமுறை இருக்கு.அந்த வழிமுறையை இங்க பாக்கலாம்.

நாம கணினி மூலமா தரவிறக்கம் செய்யிற பெரும்பாலான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் ஜிப் (ZIP) ஃபைலாகத்தான் வரும்.அதனால முதல்ல தரவிறக்கம் செய்த அப்கேஷனை (extract here) பிரித்தெடுத்து கணினியில் சேமித்துக் கொள்ளவும்.

உதாரணமா நீங்க தரவிறக்கம் செய்த அப்ளிகேஷன் barcode scanner என்ற அப்ளிகேஷனாக இருந்தால் அதை பிரித்தெடுத்த பின்பு barcode scanner. 3.2.apk என்று இருக்கும். இதில் 3.2 என்பது அந்த அப்ளிகேஷனின்  (version) வெர்ஷனை குறிக்கும். நீங்கள் தரவிறக்கம் செய்த எல்லா ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்களும் apk என்றுதான் முடியும்.

இப்போது நீங்கள் போனில் உள்ள மெமரிகார்டை தனியா கழற்றி உங்க கணினியில் இணைத்து அந்த மெமரிகார்டில் நீங்கள் தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் அப்ளிகேஷன்கள் எல்லாவற்றையும் சேமித்துக் கொள்ளவும்.

பிறகு மெமரிகார்டை கணிணியில இருந்து வெளியில் எடுத்து அதை உங்க போனில் சொருகி போனை ஆன் செய்து உங்கள் போனில் மெமரி கார்டில் உள்ளவற்றை காட்டும் அப்ளிகேஷனை  (சாம்சங் போனில் my files என்றிருக்கும்.) திறந்து பார்த்தால் அங்கே நீங்கள் கணினியிலிருந்து மெமரி கார்டுக்கு மாற்றிய அப்ளிகேஷன்கள் எல்லாமும் இருக்கும்.அதை ஒவ்வொன்றாக அழுத்தி உங்கள் போனில் பதியுங்கள்.

அப்படி எல்லாவற்றையும் பதிந்த பிறகு இப்போது உங்கள் போனில் உள்ள மெனுவைப் பாருங்கள் நீங்கள் பதிந்த அப்ளிகேஷன்கள் எல்லாமும் திரையில் காட்சியளிக்கும்.இப்போது அவைகளை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த விளக்கம் உங்களுக்கு புரியாத பட்சத்தில் எனக்கு போன் செய்யுங்கள் உங்களுக்கு தேவையான விளக்கங்களை அளிக்கிறேன்.

பின்குறிப்பு : இந்த வழியில் அடிக்கடி மெமரிகார்டை வெளியில் எடுக்க சிரமமாயிருந்தால் உங்கள் போனை mass storage மோடில் கணினியில் இணைத்து காட்டப்படும் மெமரி கார்டின் அளவில் உங்கள் அப்ளிகேஷன்களை சேமித்துக்கொண்டு அதன் பிறகு போனை தனியாக எடுத்து அப்ளிகேஷன்களை போனில் பதியலாம். 

0 comments: