மொபைலின் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்!

1

நாம வாங்குற மொபைல்ல மிகமிக முக்கியமான பிரச்சனையே அதோட ‘பேட்டரிதிறன்’ தான்.  எப்படி நம்ம மொபைலை யூஸ் பண்ணுறமோ அதை வெச்சி தான் நம்ம மொபைலின் பேட்டரியோட ஆயுள்காலம் இருக்கு. சரி இங்க மொபைலில் பேட்டரியை எப்படி பயன்படுத்தினால் அது ரொம்ப நாளைக்கு உழைக்கும்கிறதை பார்க்கலாம்.

+ நீங்க கடையிலே போயி புதுசா ஒரு மொபைல் வாங்கப்போறீங்கன்னா முதல்ல நீங்க எந்த மாடல் மொபைலை எடுத்தாலும் அதோட பேட்டரி திறன் எவ்ளோன்னு கண்டிப்பா பாருங்க 2” அங்குல திரை உள்ள எல்லா மல்டிமீடியா வசதிகளும் இருக்குற ஒரு மொபைலுக்கு குறைஞ்சது 1000 mAh திறன் கொண்ட பேட்டரி இருக்கான்னு செக் பண்ணிக்கிறது ரொம்ப முக்கியம். 

இந்த ‘அளவுகுறியீடு’ பேட்டரியோட பின்பக்கத்துல கண்டிப்பா போட்டுருப்பாங்க. அதுல பாத்து நீங்க தெரிஞ்சிக்கலாம். ஏன்னா குறைஞ்சது இந்த அளவுல பேட்டரிதிறன் இருந்தா தான் நீங்க பாட்டு கேக்குறது, இன்டர்நெட்ல பண்ணுறது,வீடியோ பாக்குறது,கேம்ஸ் விளையாடுறது.வை-பை மூலமா இன்டர்நெட் கனக்ட் பண்ணி பாக்குறதுன்னு மொபைல்ல இருக்குற எல்லா வசதிகளையும் ரொம்ப நேரம் பயன்படுத்த முடியும்.

+ இப்படி புதுசா வாங்குற மொபைலை வாங்குன உடனே சிம்மை போட்டு பயன்படுத்த கூடாது.மொதல்ல மொபைலை ஆப் பண்ணிட்டு 8 மணி நேரம் சார்ஜ் ஏத்தனும். ஒரு ரெண்டுமணி நேரம் ஆன உடனே உங்க மொபைல்ல ‘பேட்டரி புல்’லுன்னு காட்டும்.அப்படி காட்டினாலும் நீங்க நிப்பாட்டிடாதீங்க புதுபோனுக்கு முதல் தடவை சார்ஜ் ஏத்துறப்போ கண்டிப்பா 8 மணி நேரம் ஏத்தனும்.

+ அடுத்தடுத்த முறை நீங்க சார்ஜ் ஏத்தும் போது ‘பேட்டரி புல்’லுன்னு காட்டினா உடனே சார்ஜ் ஏத்துறதை நிப்பாட்டிடனும்.இல்லேன்னா பேட்டரி ரொம்ப நாளைக்கு உழைக்காது.

+ உங்க மொபைல்ல எந்த நேரமும் ப்ளுடூத்தை ஆன் பண்ணி வைக்காதீங்க,இதனால உங்க பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போயிடும்.

+ அதேமாதிரி ‘வை-பை’யையும் எந்த நேரமும் ஆன் பண்ணி வைக்க கூடாது.

+ உங்க மொபைலோட திரைவெளிச்சத்தோட(screen brighness) அளவை மொபைல்ல முன்னிருப்பா (default) என்ன அளவுல இருக்கோ அந்த அளவுலேயே வெச்சிருங்க. வெளிச்சத்தை அதிகப்படுத்தினாலும் சீக்கிரம் பேட்டரி தீர்ந்து போயிடும்.

+ மொபைல்ல பேட்டரியோட அளவு முழுசா தீர்ந்த பொறவு தான் நீங்க சார்ஜ் ஏத்தனும். பாதி,இல்லேன்னா கால்வாசி அளவுல இருக்கும் போது சார்ஜ் ஏத்தக் கூடாது.இதனாலேயும் பேட்டரி ரொம்ப நாளைக்கு உழைக்காம போயிடும்.

+ மொபைலோட திரையில் வீடியோ ரிங்டோன்,லைவ் வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர், அதிக பிக்சல் உள்ள புகைப்படங்கள் இவற்றை எல்லாம் பயன்படுத்தக் கூடாது அப்படி பண்ணினாலும் சார்ஜ் சீக்கிரமே தீர்ந்து போயிடும்.

+ நாம ஒவ்வொருத்தரும் புதுசுபுதுசா ரிங்டோன் வெச்சிக்க ஆசைப்பட்டு விதவிதமா MP3 பாடல்களை ரிங்டோனா வெச்சிருப்போம்.இதனாலேயும் சார்ஜ் சீக்கிரம் போயிடும்.அப்படி வெச்சாலும் கூட அரை அல்லது ஒருநிமிஷத்துக்கு கட் பண்ணின பாடல்களை மட்டும் ரிங்டோனா வெச்சிக்கங்க, ஒருமுழு பாடலை ரிங்டோனா வைக்க வேணாம்.

+ எப்ப பாத்தாலும் மொபைலை ‘சைலன்ட்’ல வெக்காதீங்க,அதேமாதிரி ரிங்டோன் ஒலியோட அளவையும் குறைச்சி வையுங்க.

+ நம்மல்ல நெறைய பேர் நைட்டு தூங்கப்போறப்போ மொபைலை சார்ஜ்ல போட்டுட்டு மறுநாள் தூங்கி எந்திருக்கும் போதுதான் அதை பிளக்ல இருந்து எடுப்போம் இது ரொம்ப ரொம்ப தப்பு இப்படி பண்ணினா வெகு சீக்கிரத்துல பேட்டரி சூடாகி உப்பி போயி வேலை செய்யாம போயிடும்.

+ இன்டர்நெட் யூஸ் பண்ணுற நேரம்,மெயில் செக் பண்ணுற நேரம் போக மத்த நேரங்கள்ல மொபைல்ல இன்டர்நெட் உபயோகத்தை நிப்பாட்டி வையுங்க.இதன் மூலமாவும் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போகும்.

+ அதிக வெப்பமுள்ள இடங்கள்ல பேட்டரியை வைக்க வேணாம்,அடிக்கடி மொபைல்ல பேட்டரியை கழட்டி கழட்டி மாட்டக்கூடாது.

+ கூடுமானவரைக்கும் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் விக்குற ஒரிஜினல் பேட்டரிகளை மட்டுமே மொபைல்ல யூஸ் பண்ணுங்க.காசுக்கு ஆசைப்பட்டு எந்த காரணத்தை கொண்டும் போலி யான அதேமாதிரி சார்ஜரும் ஒரிஜினலை தான் யூஸ் பண்ணனும்.

இப்படிப்பட்ட சின்னசின்ன விஷயங்கள்ல கவனமா இருந்தாலே போதும்.உங்க மொபைலோட பேட்டரி நீண்ட நாட்களுக்கு நல்லா உழைக்கும்.

‘3G’ மொபைல் வாங்கப் போறீங்களா? – ஒரு நிமிஷம்!

1
ந்தியாவைப் பொருத்தவரைக்கும் இப்போ மொபைல் உலகில் பாப்புலராகி வர்ற ஒரு விஷயம் 3G சேவை தான். அதனாலோ என்னவோ நோக்கியா
சாம்சங் உட்பட பல வெளிநாட்டு நிறுவனங்களும் ஸ்பைஸ்,மைக்ரோமேக்ஸ் போன்ற இந்திய மொபைல்தயாரிப்பு நிறுவனங்களும் மிகக் குறைந்த விலையில 3G மொபைல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஆனா இதுல நாம கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கு.அது என்னன்னா? ‘3G’ங்குற பேர்ல விற்கப்படுற எல்லா மொபைல்களும் ஒரு முழுமையான 3G தொழில்நுட்ப வசதிகளை கொண்ட மொபைல்களாக இருப்பதில்லை.

குறிப்பாக விலை குறைவாக விற்கப்படுற 3G மொபைல்கள்ல சில வசதிகள் இல்லாமல் இருக்கும்.அதனால நாம 3G மொபைல்களை வாங்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.முதல்ல நம்மல்ல நெறைய பேர்கள் பின்பக்கத்துல மட்டுமில்லாம வீடியோ காலிங் பேச உதவுற மொபைலோட முன்பக்கத்துலேயும் கேமரா (FROND CAMERA) இருக்குற மொபைல் தான் 3G மொபைல்னு நெனைக்கிறாங்க. அது வாஸ்தவம் தான்.

ஆனா அது மட்டுமே 3G இல்லை. 3G சேவைங்கிறது ஒரு மூன்றாம் தலை முறை தொழில் நுட்பத்தோட பேரு ( 3G is the third generation of mobile communications systems ) அவ்ளோ தான்.

இந்த 3G தொழில்நுட்பத்துல மூன்று வகையான இணைய வங்கம் உண்டு.அந்தந்த இணைய வேகத்தோட அளவுகளைப் பொறுத்து ஒவ்வொரு இணைய வேகத்துக்கும் ஒவ்வொரு பேர் உண்டு.

+ WCDMA( Wideband Code Division Multiple Access) – இதோட அதிகப்பட்ச இணைய வேகம் 2 Mbps வரைக்கும் தான். ஆனாலும் நோக்கியா உட்பட பெரும்பாலான மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தில் அதிகபட்ச வேகம் 384 kbps என்ற வேக அளவில் தான் கொடுக்கிறார்கள்.

+ HSDPA(High-Speed Downlink Packet Access ) – இதோட அதிகபட்ச இணைய வேகம் 14.4 Mbps. இந்த HSDPA வுல பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகள் இருக்கு.ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வேகம்.

கீழே உள்ள படத்தை பாருங்க உங்களுக்கு புரியும்.இதுல நமக்கு மொபைல் தயரிச்சி விற்பனை செய்ற நிறுவனங்கள்  மொபைலோட விலைக்கு ஏத்த மாதிரி ஒரு பிரிவின் வேகத்தை தேர்ந்தெடுத்து நம்ம மொபைல்ல குடுப்பாங்க.

nokia 5230 wcdma and hsdpa speed

nokia e6 hsdpa speed
நோக்கியா 5230 மாடல்ல WCDMA வில் இணைய இணைப்பின் வேகம் மற்றும் HSDPA வில் CATEGARY 6 ல் அதிகபட்ச வேகம் 3.6 Mbps  என்ற அளவில்
இருப்பதைப் பாருங்கள்.

அதேபோல நோக்கியா N8 மாடலில் HSDPA வில் இணைய இணைப்பின் வேகம் Cat9 இல் அதிகபட்ச வேகம் 10.2 Mbps அதன் இணையவேகத்தின் மாறுபட்ட அளவுகளைப் பாருங்கள்.

குறைவான விலையில் 3G மொபைல்களை தயாரித்து விற்பனை செய்யும் ஸ்பைஸ் லெமன்,பீடல்,மைக்ரோமேக்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் 3G மாடல்களில் WCDMA தொழிநுட்பத்தில் அதிகபட்சம் 384 kbps என்ற வேக அளவையும் HSDPA தொழில் நுட்பத்தில் அதிகபட்சம் 3.5 என்ற வேக இணை ப்பை தான் நமக்கு வழங்குகின்றன.மேலும் இந்திய நிறுவனங்கள் 3G என்ற பெயரில் விற்கும் மொபைல்களில் WCDMA தொழில்நுட்பத்தை மட்டுமே புகுத்தி குறைந்த விலையில் நம்மிடம் விற்கின்றனர்.

ஆகவே நீங்கள் ஒவ்வொரு முறை 3G மொபைல் வாங்கும் போதும். கண்டி ப்பாக அதன் நெட்வொர்க் மற்றும் இணைய இணைப்பின் வேகத்தின் அளவு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு வாங்கவும். அப்போது தான் மொபைலில் நாம் தடையில்லா இணைய இணை ப்பை பெற முடியும்.

அதேபோல என்னிடம் நெறைய பேர் இந்த மொபைல்ல முன்னாடி கேமரா இல்லை அத னால இது 3g மொபைல் இல்லை என்று சொல்வார்கள். வீடியோ காலிங் செய்யக்கூடிய வகையில் இருக்கும் முன்பக்க கேமரா 3G சேவையில் ஒரு மேம்படுத்தப்பட்ட வசதிதானே தவிர அது இருந்தால் மட்டுமே ஒரு மொபைல் 3G மொபைல் ஆகி விடாது. எத்தனையோ சீன நிறுவனங்கள் டபுள் கேமரா உள்ள மொபைல்களை சந்தையில் விற்கின்றன. உடனே அவை எல் லாம் 3G மொபைல் ஆகிவிடுமா என்ன?

இந்தியாவில் 3500/- ரூபாய் விலையிலிருந்து 3G மொபைல்கள் கிடைக் கின்றன.ஆகவே உங்கள் மொபைலை 3G க்கு அப்கிரேடு செய்யும் போது எல்லா வசதிகளும் உள்ள மொபைலாக இருக்கிறதா என்பதை கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.

மொபைலுக்கான இலவச எஸ்.எம்.எஸ் அப்ளிகேஷன்கள்!

1
நாம் மொபைல் போன் உபயோகிக்க ஆரம்பித்த காலம் தொட்டு போனில் பேசுவதை விட எஸ்.எம்.எஸ் அனுப்புவதைத் தான் பெரிதும் விரும்புகிறோம்.

'மௌனத்தை விட இந்த உலகில் மிகச்சிறந்த மொழி
வேறேதும் இல்லை' என்று சொல்வார்கள். இது எஸ்.எம்.எஸ் க்கு மிகவும் அழகாக பொருந்திப் போகிறது.காரணம் நாம் மொபைலில் பேசித் தீர்க்க முடியாத சில விஷயங்களை எஸ்.எம்.எஸ் மூலமாக பேசி தீர்த்து விடுவோம்.

எஸ்.எம்.எஸ் கூட நாம் மற்றவர்களிடம் மௌனமாய் பேசுவதைப் போல ஒரு மொழிதான். அப்படிப்பட்ட எஸ்.எம்.எஸ் சேவைக்கு மொபைல்சேவை தரும் நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ்,ஒரு நாளைக்கு நூறு எஸ்.எம்.எஸ் இலவசம்,ஒரு பைசாவுக்கு எஸ்.எம்.எஸ் என்று பல சலுகைகளை வழங்கி வருகிறார்கள்.

இதை சலுகைகள் என்று சொல்வதை விட மறைமுகக் கொள்ளை என்று தான் சொல்ல வேண்டும்.காரணம் மொபைல்சேவை தரும் நிறுவனங்கள் லாபம் இல்லாமல் எந்த சலுகைகளையும் நமக்கு தர மாட்டார்கள்.

அதனால் மொபைலும் உபயோகிக்க வேண்டும்.அதேநேரம் நமது மொபைலில் இருந்தே இலவசமாக மற்றவர்களுக்கு 'எஸ்.எம்.எஸ்'சும் அனுப்ப வேண்டும் இதற்கு சில நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ் சேவையுடன் கூடவே மொபைலுக்கான அப்ளிகேஷன்களையும் நமக்கு தருகின்றன.

அவைகளை இங்கே உங்களுக்காக தொகுத்து தருகிறேன்.

www.160by2.com  பெரும்பாலானவர்களால் உபயோகிக்கப்படும் முதல் இடத்தில் இருக்கும் இலவச எஸ்.எம்.எஸ் இணையதளம் இதுதான். இந்த இணையதளத்தில் இந்தியா மட்டுமல்லாது குவைத், சிங்கப்பூர்,மலேசியா,
யு.ஏ.இ என வெளிநாடுகளில் உள்ள மொபைல்களுக்கும் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.

இந்த இணையதளம் மொபைலுக்காகவே பிரத்யேகமாக தரும் அப்ளிகேஷனை நமது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டால் கணினி இல்லாமலேயே நமது மொபைலிலிருந்தே மற்றவர்களுக்கு இலவசமாக அனுப்பிக்
கொள்ளலாம்.இது ஜாவா வகையை சார்ந்த அப்ளிகேஷன் என்பதால் நோக்கியா,சாம்சங்,சோனிஎரிக்சன்,எல்.ஜி,மோட்டோரோலா என பெரும்பாலான கம்பெனிகளின் மொபைல்களுக்கு இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் செய்கிறது.பிளாக்பெர்ரி,ஐ-போன்,ஆன்ட்ராய்டு ஆகிய ஓ.எஸ் கொண்ட மொபைல்களுக்கும் அதன் மார்க்கெட்டுகளில் தனி அப்ளிகேஷனாக கிடைக்கிறது.

இந்த அப்ளிகேஷன் நமது மொபைலின் போன்புக்கில் உள்ள நம்பர்களை தானாகவே இணைத்துக் கொள்வதால் நாம் எஸ்.எம்.எஸ் அனுப்புவது இன்னும் எளிமையாகிறது.இதன் ஒரேகுறை 80 எழுத்துகளில் மட்டுமே எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.

+ www.way2sms.com  இந்த இணையதளமும் கணினி மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களின் பேவரைட் இணையதளம்.கணினி மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்ப தினமும் 26 லட்சம் பேர்கள் இந்த தளத்தை பயன்படுத்துகிறார்கள்.160 எழுத்துகள் வரை நாம் எஸ்.எம்.எஸ் டைப் செய்து அனுப்ப முடியும்.

மொபைலுக்கான பிரத்யேகமான அப்ளிகேஷனை இவர்கள் இன்னும் தரவில்லை என்றாலும் நமது மொபைலின் பிரௌசரில் http://m.way2sms.com என்று டைப் செய்து இந்த இணையதளம் மூலம் நாம் மற்றவர்களுக்கு அளவற்ற இலவச எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.இங்கு வெளிநாடுகளுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி இல்லை.கூடுதல் சேவையாக நமது இ-மெயில் களை மொபைலில் படித்துக் கொள்ளும் வசதியையும் தருகிறார்கள்.

www.jaxtr.com  120 எழுத்துகளை மட்டுமே டைப் செய்து மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ள முடியும்.மூன்று கட்டண திட்டங்கள் உண்டு அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்தால் குறைந்த கால்கட்டணங்களில் வெளிநாடுகளுக்கு பேசிக்கொள்ளவும்,இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளவும் முடியும்.இதில் இருக்கும் free connect மூலம் இலவசமாக பேசிக் கொள்ளலாம்.பிளாக்பெர்ரி,ஐ-போன்,ஆன்ட்ராய்டு ஆகிய ஒ.எஸ் மொபைல் களுக்கு பிரத்யேகமாக அப்ளிகேஷனும் உண்டு.

www.mysmsindia.com   way2sms இணையதளம் போல் உள்ளது. இந்தியாவுக்குள் எந்த மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.
தனியாக மொபைலில் பயன்படுத்த அப்ளிகேஷன் இல்லை.

www.mycantos.com  300 எழுத்துகள் வரை சப்போர்ட் செய்கிறது.மொபைலில் பயன்படுத்த தனி அப்ளிகேஷன் இல்லை.

www.sms440.com  மிக நீளமான எஸ்.எம்.எஸ் அனுப்ப உதவும் இணையதளம் இதுதான்.இணையதளத்தின் பெயரைப் போலவே கிட்டத்தட்ட 440 எழுத்து களை டைப் செய்து அனுப்பலாம்.மொபைலுக்கான தனி அப்ளிகேஷன் இல்லை.

www.ibibo.com   http://m.ibibo.com முகவரி மூலம் உங்கள் மொபைலில் இலவச எஸ்.எம்.எஸ் சேவையைபயன்படுத்தலாம்.மெயில்,போட்டோஸ்,மியூசிக்,
கேம்ஸ் என பல சேவைகள் இதில் உண்டு.

www.mobiyard.com   மொபைலுக்கான பிரத்யேகமான எஸ்.எம்.எஸ் அப்ளிகேஷன் இது. ஜாவா வகை என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போன்களை இது ஆதரிக்கிறது.இலவச எஸ்.எம்.எஸ் சேவையுடன் இன்ஸ்டன்ட் மெசஞ்ஜர்,கேமிங் போர்டல் என இதர சேவைகளும் உண்டு.அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.

www.skebby.com   இந்த அப்ளிகேஷனை மொபைலில் பயன்படுத்தும் அத்தனை பேர்களுக்கும் நீங்கள் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.பிளாக்பெர்ரி,ஐபோன்,ஆன்ட்ராய்டு,சிம்பியன்,ஜாவா,
விண்டோஸ் ஒ.எஸ் என எல்லா வகை ஒ.எஸ் மொபைல்களுக்கும் தனி அப்ளிகேஷனாக பயன்படுத்தலாம்.இலவசம் என்று சொன்னாலும் சேவையை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கிறார்கள்.அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.

கூகுள் + ஐ மொபைலில் பயன்படுத்துவது எப்படி?

0
மீபகாலமாக ஃபேஸ்புக்,டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இணைய தள ரசிகர்களிடையே தவிர்க்க முடியாத,பெரும் வரவேற்பை பெற்று வருது. எகிப்துல மக்கள் புரட்சி நடக்க மிக முக்கிய பங்காளனா இருந்தது இந்த ரெண்டு சமூக வலைத் தளங்களும் தான். இந்த வரவேற்பை ரொம்பவே கூர்ந்து கவனிச்சு கூகுள் நிறுவனம் அறிமுகப்
படுத்தியிருக்கும் ஒரு புதிய சோஷியல் நெட்வொர்க் தளம் தான் ‘கூகுள் பிளஸ்'.

இப்போ சோதனை ஓட்டமா இதை அறிமுகப்படுத்தியிருக்குது கூகுள்.காரணம் கூகுளோட ரசிகர்கள் இதுல ஏதேனும் குறைகளை சொன்னா அதை நிவர்த்தி பண்ணி அப்புறமா ஒரு முழுமையான தளமா குடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கு. கூடிய சீக்கிரம் இதுல இருக்குற சின்ன சின்ன குறைகளை எல்லாம் நிவர்த்தி பண்ணி ஃபேஸ்புக் ,டிவிட்டருக்கு நிகரா ‘கூகுள் பிளஸ்’ வரும்னு நாம நம்பலாம்.

ஜிமெயிலை அறிமுகப்படுத்தின புதுசுல எப்படி அதை ஏற்கனவே யூஸ் பண்ணுற ஒருத்தர் நம்மளை இன்வைட் பண்ணினா அதை பயன்படுத்த முடியும்கிற மாதிரி கூகுள் பண்ணிச்சோ அதே நிலமை தான் கூகுள் பிளஸ்க்கும்.ஆமாம்,நாம கூகுள் பிளஸ் தளத்தை முழுமையா பயன் படுத்தனும்னா அதை ஏற்கவே யூஸ் பண்ணுற நண்பர் யாராவது ஒருத்தர் நமக்கு இமெயில்ல இன்வைட் அனுப்பனும். அப்போதாம் நாம யூஸ் பண்ண முடியும்.

சரி டெஸ்க்டாப்,லேப்டாப்ல கூகுள் பிளஸ் ஈஸியா பயன்படுத்தலாம். மொபைல்ல அது சாத்தியமா?

கண்டிப்பா சாத்தியம் தான். ஆனா அதிலேயும் இன்னும் முழுமை இல்லை. இருந்தாலும் முடிஞ்சவரைக்கும் மொபைல்ல ‘கூகுள்பிளஸ்’ ஐ எப்படி பயன்படுத்தலாம்னு இங்க பாக்கலாம்.நீங்க ஆன்ட்ராய்டு ஓ.எஸ் உள்ள மொபைல்ல 2.1 இல்லேன்னா அதுக்கும் மேல உள்ள வெர்ஷன் வெச்சிருந்தீங்கன்னா முதல்ல உங்களோட ஆன்ட்ராய்டு மார்க்கெட்டை அப்டேட் பண்ணிட்டு அப்புறம் அங்க இருக்குற சர்ச் பாக்ஸ்ல google+ ன்னு டைப் பண்ணி தேடுனீங்கன்னா வர்ற அப்ளிகேஷன்கள்ல முதல் அப்ளிகேஷன் அதுவாத்தான் இருக்கும். அதை கிளிக் பண்ணி இன்ஸ்டால் பண்ணி நீங்க யூஸ் பண்ண ஆரம்பிக்கலாம்.

google + barcode
இல்லேன்னா உங்க மொபைல்ல இங்க இருக்குற பார்கோடை(மேலே உள்ள படத்தை பார்க்கவும்!) capture பண்ணுனீங்கன்னா வர்ற லிங்ல போயி அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்யலாம். பார்கோடை capture பண்ண உங்க மொபைல்ல barcode reader அல்லது barcode scanner அப்ளிகேஷன் கண்டிப்பா இருக்கணும். இல்லேன்னா மார்க்கெட்டுல போயி இலவசமா தரவிறக்கம் செஞ்சிக்கங்க.

ஆனா இப்போதைக்கு அமெரிக்காவுல இருக்குற ஆன்ட்ராய்டு மொபைல் களுக்கு மட்டும் தான் இந்த தனிப்பட்ட அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்யக்கூடிய வசதி இருக்குன்னு கூகுள் சொல்லியிருக்கு. மத்த நாட்டுல உள்ளவங்க அவங்க மொபைலோட ப்ரௌசர்ல m.google.com/plus ன்னு அட்ரஸ் டைப் பண்ணி கூகுள் பிளஸ் ஐ யூஸ் பண்ண முடியுமாம். அதெப்படி அவிங்க மட்டும் தனி அப்ளிகேஷனா பயன்படுத்தலாம். நம்மளால முடியாதான்னு நீங்க கேக்கலாம்.கண்டிப்பா முடியும்

எப்படி ? ரொம்ப சிம்பிள், உங்க கணிணியில ஆன்லைன்ல போயிட்டு இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க, அப்புறமா ஓபன் ஆகுற பக்கத்துல நடுவுல view ன்னு இருக்குறதை கிளிக் பண்ணுனா உங்க ஆன்ட்ராய்டு போனுக்கான ‘கூகுள் பிளஸ்’ அப்ளிகேஷன் டவுன்லோடு ஆகும்.அதை அப்படியே உங்க மொபைல இன்ஸ்டால் பண்ணி நீங்க பயன்படுத்தலாம்.

இப்போதைக்கு ஆன்ட்ராய்டு ஒ.எஸ் மொபைல்களுக்கும் ஆப்பிள் ஐ-போனுக்கு மட்டும் தான் இந்த தனி அப்ளிகேஷன் வந்திருக்கு. அடுத்ததா சிம்பியன் ஓ.எஸ்,பிளக்பெர்ரி ஓ.எஸ், விண்டோஸ் மொபைல் ஓ.எஸ் ல சீக்கிரம் வரப்போவுது. இந்த ஓ.எஸ் களுக்கான ‘கூகுள் பிளஸ்’ தனி அப்ளிகேஷனும், எஸ்.எம்.எஸ் மூலமா ‘கூகுள் பிளஸ்’ ஐ பயன்படுத்துற வசதியும் கொஞ்சம் லேட்டா வரும்.

ஆப்பிள் ஐ- போனுக்கு கூகுள் பிளஸ் அப்ளிகேஷன் இப்போது அதன் மார்க்கெட்டில் கிடைக்கிறது, தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்.

மொபைலுக்கான இணைய வானொலிகள்!

1

மொபைல் போன் வழியாக இணையதளங்களை பயன்படுத்தும் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.ஒரு வழியாக இந்தியாவிலும் 3ஜி எனப்படுகிற மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தை சென்னை உட்பட இந்தியாவின் பெருநகரங்களில் பி.எஸ்.என்.எல், ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ரிலையன்ஸ்,டோகோமோ என அனைத்து மொபைல் ஆப்பரேட்டர் நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி யிருப்பதால் மொபைல் பாவனையாளர்கள் மிக அதிக அளவில் அந்த 3ஜி சேவையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

அதேபோல் மொபைல் மூலமாக இணைய வானொலிகளையும் நாம் பயன்படுத்தி அதன்மூலம் உலகம் முழுக்க இருக்கின்ற தமிழ் உட்பட பல மொழிகளில் உள்ள வானொலிகளை 24மணி நேரமும் நாம் நமது மொபைலில் டிஜிட்டல் ஒலிதரத்தில் கேட்க முடியும்.

இதற்கு GPRS மற்றும் EDGE தொழில்நுட்ப வேகம் இருந்தால் போதும், நாம் இணையதள வானொலி சேவைகளை கேட்க முடியும்.என்றாலும் 3ஜி தொழில்நுட்பம் இருந்தால் தடையில்லா (buffering problem) வானொலி சேவைகளை கேட்க முடியும். அது இன்னும் சிறப்பாக இருக்கும்.

இந்த இணையதள வானொலி சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவே நமக்கு பல்வேறு நிறுவனங்கள் இலவச மொபைல் அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. அவற்றை நாம் நமது மொபைல் போன்களில் பதிந்து கொண்டால் ஒரு புதிய இசை உலகை நீங்கள் காணலாம்.

பின்குறிப்பு : பின்வரும் வானொலிகளின் பெயர்களின் மேலே "கிளிக்" செய்து அந்தந்த வானொலிகளின் இணையதளங்களில் சென்று சொல்லப்படும் வழிமுறைகளை பின்பற்றி அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

virtual radio  இந்த மென்பொருளில் 300 க்கும் மேற்பட்ட மொழி வாரியான வானொலிகளை கேட்கலாம்.குறிப்பாக தமிழ் வானொலிகள் அதிகம் இதில் இடம்பெற்றுள்ளன. ஒலி அமைப்பும் டிஜிட்டல் தரத்தில் உள்ளது கூடுதல் சிறப்பம்சம்.

+ spodtronic  இதுவும் ஒரு அசத்தலான மென்பொருள்,ஆனால் இதில் தமிழை விட மற்ற மொழி இணைய வானொலிகளை தான் நாம் அதிகமாக கேட்க முடியும்,வந்த புதிதில் இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்த மென்பொருளை இப்போது காசு கொடுத்தால் தான் தருகிறார்கள். பாடலை கேட்கும் போதே பாடல் இடம்பெற்ற ஆல்பம்,பாடியவர்கள் விபரம்,பாடலை நாம் மதிப்பீடு செய்யும் முறை என்று அசத்துகிறார்கள்.

+ tunin fm  இது முழுக்க முழுக்க அயல்நாட்டு மேற்கத்திய இசையை விரும்புபவர்களுக்கான தளம்,மிகக்குறைந்த வேகத்தில் ஒலியின் தன்மை அற்புதமாக உள்ளது.

mundu radio  இந்தியாவில் உள்ள Geodesic Limited என்ற நிறுவனம் தரும் மொபைலுக்கான இணைய வானொலி மென்பொருள் இது. இப்போது மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலும் நூற்றுக்கணக்கான வானொலிகளை கேட்க முடியும்.

lavella radio  நூற்றுக்கும் மேற்பட்ட வானொலிகளை கேட்க முடியும்.இலவச மென்பொருள் தான், இருந்தாலும் இதில் காசு கொடுத்து வாங்கப்படும் மற்றொரு மென்பொருளில் தான் முழுமையான டிஜிட்டல் தரம் கிடைக்கும்.

nokia internet radio  நோக்கியாவின் சார்பில் அதன் பாவனையாளர்களுக்கு தரப்படும் இணைய வானொலி இலவச மென்பொருள் இது. பெரும்பாலும் போன்களிலேயே பதிந்து வரும். இல்லாதவர்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.சூப்பர் மென்பொருள் இது.